தமிழ் திரைப்பட நடிகர் விசு உடல்நல குறைவால் காலமானார்


தமிழ் திரைப்பட நடிகர் விசு உடல்நல குறைவால் காலமானார்
x
தினத்தந்தி 22 March 2020 1:55 PM GMT (Updated: 2020-03-22T19:25:36+05:30)

தமிழ் திரைப்பட நடிகர் விசு உடல்நல குறைவால் இன்று காலமானார்.

சென்னை,

தமிழ் திரையுலகில் இயக்குனர், வசனம், திரைக்கதை எழுத்தாளர், மேடை நடிகர், திரைப்பட நடிகர் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர் என பன்முக தன்மையுடன் செயல்பட்டவர் நடிகர் விசு.  கடந்த 1945ம் ஆண்டு ஜூலை 1ந்தேதி பிறந்த இவர், இயக்குனர் கே. பாலசந்தரிடம் உதவி இயக்குனராக தொடக்க காலத்தில் இருந்து வந்துள்ளார்.

இதன்பின்பு இயக்குனரானார்.  குடும்ப கதைகளையே பெருமளவில் படங்களாக்கிய  இவரது படைப்பில் சம்சாரம் அது மின்சாரம், பெண்மணி அவள் கண்மணி, திருமதி ஒரு வெகுமதி, டவுரி கல்யாணம், வேடிக்கை என் வாடிக்கை, மணல் கயிறு உள்ளிட்ட படங்கள் மக்களின் வரவேற்பை பெற்றன.  திரைப்படங்களில் இவர் பாடல்களையும் பாடியுள்ளார்.  நடிகர் விசு தமிழ் தவிர்த்து தெலுங்கு படங்களையும் இயக்கியுள்ளார்.

சமீப நாட்களாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த இவர் வெளிநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்துள்ளார்.  இந்நிலையில், உடல்நல குறைவால் நடிகர் விசு இன்று காலமானார்.  அவருக்கு வயது 74.  நடிகர் விசுவுக்கு சுந்தரி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.

Next Story