60 பணியாளர்களுடன் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த அனுமதி


60 பணியாளர்களுடன் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த அனுமதி
x
தினத்தந்தி 30 May 2020 3:31 AM GMT (Updated: 30 May 2020 3:31 AM GMT)

60 பணியாளர்களுடன் நாளை முதல் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்தலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.

சென்னை

அதிகபட்சமாக 60 நடிகர், நடிகை, தொழில்நுட்ப பணியாளர்களை கொண்டு சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த அனுமதித்து முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி அறிவித்து உள்ளார்.

தமிழக அரசுவெளியிட்டு உள்ள அறிக்கையில் 

அதிகபட்சமாக 60 நடிகர், நடிகை, தொழில்நுட்ப பணியாளர்களை கொண்டு சின்னத்திரை படப்பிடிப்பை நடத்தலாம்.

சென்னையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு மாநகராட்சி ஆணையரிடம் முன் அனுமதி பெற வேண்டும். பிற மாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெற வேண்டும்.

ஒவ்வொரு சின்னத்திரை தொடரின் முழுப்படப்பிடிப்பிற்கும் ஒரு முறை மட்டும் முன் அனுமதி பெற வேண்டும். நாளை முதல், அதிகபட்சமாக 60 நடிகர், நடிகை, தொழில்நுட்ப பணியாளர்களை கொண்டு சின்னத்திரை படப்பிடிப்பை 31.5.2020 முதல் நடத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது என அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story