இருமொழிக்கொள்கையில் உறுதியாக இருக்கும் முதலமைச்சர் பழனிசாமிக்கு வைரமுத்து பாராட்டு


இருமொழிக்கொள்கையில் உறுதியாக இருக்கும் முதலமைச்சர் பழனிசாமிக்கு வைரமுத்து பாராட்டு
x
தினத்தந்தி 3 Aug 2020 8:02 AM GMT (Updated: 2020-08-03T13:32:31+05:30)

இருமொழிக்கொள்கையில் உறுதியாக இருக்கும் முதலமைச்சர் பழனிசாமிக்கு வைரமுத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை,

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை திட்டத்தில் உள்ள மும்மொழி கொள்கையை ஏற்க முடியாது என தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சியினர் பலர் கூறி வந்த நிலையில் இன்று ஆலோசனைக்கு பிறகு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் மும்மொழி கொள்கையை அமல்படுத்த முடியாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் எப்போது இருமொழி கொள்கையே தொடரும் என தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் பழனிசாமியின் இந்த முடிவிற்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

இருமொழிக் கொள்கையில் உறுதிகாட்டியிருக்கும் தமிழ்நாட்டு முதலமைச்சர் பழனிச்சாமியைப் பாராட்டுகிறேன்.

தமிழ் உணர்வாளர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன். கோரிக்கை வைக்க உரிமையிருந்த எனக்கு நன்றி சொல்லும் கடமையுமிருக்கிறது என பதிவிட்டுள்ளார்.


Next Story