இயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் உதயம்


இயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் உதயம்
x
தினத்தந்தி 3 Aug 2020 9:25 AM GMT (Updated: 3 Aug 2020 9:25 AM GMT)

இயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் உதயமாகி உள்ளது.

சென்னை, 

நடிகர் விஷால் தலைமையில் செயல்பட்டு வந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தின் செயல்பாடுகள் முடங்கி உள்ளன. 

இந்த நிலையில், இயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் உதயமாகி உள்ளது. 

இதுகுறித்து பாரதிராஜா கூறுகையில், “தாய் சங்கத்தை உடைக்கவோ, பிரித்தெடுக்கவோ இல்லை. கொரோனாவால் நுரையீரல் பாதிக்கப்பட்ட சினிமாவை திரையுலகினரே மருந்து கொடுத்து சரியாக்க வேண்டிய நேரம் இது. உறுப்பினர் சேர்க்கை இன்றிலிருந்து தொடங்க உள்ளது. புதிய நிர்வாகிகள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும். என்று தெரிவித்தார். 

மேலும் புதிய சங்கத்தின் பிறப்பு அவசியமாகிறது என்றும் தயாரிப்பாளர்களுக்கு பாரதிராஜா விளக்கமளித்துள்ளார்.

Next Story