ஒவ்வொரு நாளும் சொர்க்கத்தில் இருக்கிறேன்; நடிகை சன்னி லியோன் மகிழ்ச்சி


ஒவ்வொரு நாளும் சொர்க்கத்தில் இருக்கிறேன்; நடிகை சன்னி லியோன் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 9 Aug 2020 7:44 AM GMT (Updated: 2020-08-09T13:14:59+05:30)

கொரோனா காலத்தில் ஒவ்வொரு நாளும் சொர்க்கத்தில் இருக்கிறேன் என நடிகை சன்னி லியோன் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.

நியூயார்க்,

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தி மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போய் உள்ளது.  பல நாடுகளில் ஊரடங்கால் பொதுமக்கள் அதிக அவதிக்கு ஆளாகினர்.  ஊரடங்கு தளர்விலும், முககவசம் அணிதல் உள்ளிட்ட விதிகளை பின்பற்றி கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இதனால், அரசு, தனியார் நிறுவனங்கள், அமைப்புகள் பெருமளவில் வழக்கம்போல் செயல்படாமல் திணறி வருகின்றன.  மக்களை மகிழ்விக்கும் விளையாட்டு போட்டிகள் நடைபெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டது.  ரசிகர்களே இன்றி காலியான கேலரியுடன் கால்பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

இதேபோன்று படப்பிடிப்புகள் இல்லாத நிலையில், நடிகர் நடிகைகள் சமையல் செய்தல், வீட்டை தூய்மைப்படுத்துதல் உள்ளிட்ட தங்களது அன்றாட பணிகளை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களாக சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

கொரோனா பாதிப்புகள், இயற்கை சீற்றங்கள், திடீர் விபத்துகள் என பெருமளவிலான மக்கள் தொடர்ந்து போராடி கொண்டிருக்கையில், நடிகை சன்னி லியோன் கொரோனா காலத்தில் ஒவ்வொரு நாளும் சொர்க்கத்தில் இருக்கிறேன் என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டு உள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், ஹலோ மக்களே கொரோனா சொர்க்கத்தின் மற்றொரு நாள்.  இதனை நான் நேசிக்கிறேன் என பதிவிட்டு காரில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு உள்ளார்.

கடந்த 2 நாட்களுக்கு முன் தனது கணவர் டேனியல் வெபர் மற்றும் நிஷா, நோவா மற்றும் ஆஷர் ஆகிய 3 குழந்தைகளுடன் தீயணைப்பு நிலையத்திற்கு சென்றுள்ளார்.  தீ விபத்தில் இருந்து பாதுகாத்து கொள்வது பற்றி தங்களது குழந்தைகளுக்கு அவர்கள் கற்று கொடுத்தனர்.

Next Story