நீட், ஜே.இ.இ தேர்வுகளை ஒத்திவைக்க மத்திய அரசுக்கு நடிகர் சோனு சூட் வேண்டுகோள்


நீட், ஜே.இ.இ தேர்வுகளை ஒத்திவைக்க மத்திய அரசுக்கு நடிகர் சோனு சூட் வேண்டுகோள்
x
தினத்தந்தி 25 Aug 2020 1:16 PM GMT (Updated: 2020-08-25T18:46:22+05:30)

நீட், ஜே.இ.இ தேர்வுகளை ஒத்திவைக்க மத்திய அரசுக்கு நடிகர் சோனு சூட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மும்பை,

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதியும், ஜேஇஇ மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6 ஆம் தேதி வரையிலும், ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு செப்டம்பர் 27 ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், கொரோன பெருந்தொற்று சமயத்தில் தேர்வுகளை நடத்துவது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் நீட் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்,  நடிகர் சோனு சூட் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

கொரோனா சூழலை கருத்தில் கொண்டு நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளை மத்திய அரசு ஒத்திவைக்க வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொள்ள வேண்டுமே தவிர அவர்க்ளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடக்கூடாது என தெரிவித்துள்ளார்.

Next Story