எனது வீடு இடிக்கப்பட்டது போல், மராட்டிய முதல்வர் ஆணவமும் இடிக்கப்படும்- கங்கானா ரனாவத் ஆவேசம்


எனது வீடு இடிக்கப்பட்டது போல், மராட்டிய முதல்வர் ஆணவமும் இடிக்கப்படும்- கங்கானா ரனாவத் ஆவேசம்
x
தினத்தந்தி 10 Sep 2020 6:19 AM GMT (Updated: 2020-09-10T11:49:28+05:30)

தனது வீடு இடிக்கப்பட்டது போல், மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரேயின் ஆணவமும் இடிக்கப்படும் என்று நடிகை கங்கனா ரனாவத் காட்டமாக தெரிவித்துள்ளார்.

மும்பை : 

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல் மும்பை நகரம் உள்ளது என்று நடிகை கங்கனா விமர்சித்ததால் ஆளும் சிவசேனா அரசு கடும் கோபம் அடைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக கங்கானாவின் வீட்டு வளாகத்தில் சட்டவிரோத கட்டுமானங்கள் உள்ளதாக கூறி அதனை நேற்று மும்பை மாநகராட்சி ஊழியர்கள் இடிக்கத் தொடங்கினர். ஆனால் மும்பை ஐகோர்ட்டின் தலையீட்டால் இடிப்புப் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. 

இந்த நிலையில் தனது வீடு இடிக்கப்பட்டது போல் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயின் ஆணவமும் இடிக்கப்படும் என்று நடிகை கங்கனா தெரிவித்துள்ளார். இன்று அனுகூலமாக உள்ள காலம் எப்போதும் அப்படியே இராது என்றும்  குறிப்பிட்டுள்ளார். 

மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரேயை தாக்கி பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் அவர் கூறியிருப்பதாவத:-

'முதல்வர் உத்தவ் தாக்கரே அவர்களே, நீங்கள் என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்? திரைப்பட மாபியாக்களுடன் இணைந்து எனது வீட்டை இடித்ததன் மூலம், என்னை பழிவாங்கி விட்டதாக நினைக்கிறீர்கள். இன்று எனது வீடு இடிக்கப்பட்டுள்ளது. உங்கள் ஆணவம் நாளை நொறுங்கும். காலத்தின் சக்கரங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன,' இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story