பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் ஆல் டைம் ரெக்கார்டு சாதனை!


பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் ஆல் டைம் ரெக்கார்டு சாதனை!
x
தினத்தந்தி 25 Sep 2020 9:21 AM GMT (Updated: 25 Sep 2020 9:21 AM GMT)

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் எத்தனையோ பின்னணி பாடல்கள் பாடுவதில் பல சாதனைகள் புரிந்து உள்ளார். அவரது ஆல் டைம் ரெக்கார்டு சாதனை!

சென்னை

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று மாலை 6.30 மணிக்கு அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் இன்றும் அவரது உடல்நிலை தொடர்ந்து அதே நிலையில் இருந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த நிலையில், இயக்குனர் வெங்கட்பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று மதியம் 1.04 மணிக்கு உயிரிழந்ததாக தகவல் வெளியிட்டார். இதற்கடுத்ததாக மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த அவரது மகன் எஸ்.பி.பி.சரண் இந்த தகவலை உறுதிபடுத்தினார்.

எஸ்.பி.பி 16 மொழிகள் மற்றும் 50,000-க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடி கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்து உள்ளார். 

எஸ்.பி.பி 6 முறை (1979, 1981, 1983, 1988, 1995, 1996) சிறந்த பாடகருக்கான தேசிய விருது பெற்றுள்ளார். 

மத்திய அரசு வழங்கும் பத்ம ஸ்ரீ (2001), பத்ம பூஷன்(2011) விருதுகளை பெற்றுள்ளார். 

எஸ்.பி.பி தொடரந்து 12 மணி நேரம் பாடியும் சாதனை படைத்துள்ளார்.

எஸ்.பி.பி ஏக் துஜே கேலியே படத்தின் வெற்றிக்கு பின் அவர் மும்பையில் ஒரே நாளில் 19 பாடல்களை பாடி சாதனை படைத்தார்.இதுவே அனைத்து பாடகர்களையும் விட அவர் பாடி சாதனை செய்த ஆல் டைம் ரெக்கார்டு ஆக கருதப்பட்டது.

பாடகராக மட்டும் இல்லாமல் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இசையும் அமைத்துள்ளார் எஸ்.பி.பி. ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கும் டப்பிங்கும் கொடுத்துள்ளார். 

Next Story