நீ எழுந்து வரவேண்டும் என கூறினேன், ஆனால் நீ வரவில்லை பாலு - இளையராஜா உருக்கம்


நீ எழுந்து வரவேண்டும் என கூறினேன், ஆனால் நீ வரவில்லை பாலு  - இளையராஜா உருக்கம்
x
தினத்தந்தி 25 Sep 2020 5:00 PM GMT (Updated: 2020-09-25T22:30:55+05:30)

எஸ்பிபி மறைவுக்கு இசையமைப்பாளர் இளையராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

கொரோனா தொற்று பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 51 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த  எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இன்று பிற்பகல் மரணம் அடைந்தார். எஸ்.பி பாலசுப்பிரமணியம் மறைவு திரையுலகத்தினரை கண்ணீர் கடலில் ஆழ்த்தியுள்ளது.

எஸ்.பி பாலசுப்பிரமணியம் மறைவுக்கு அவரது ரசிகர்கள், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, முதலமைச்சர் பழனிசாமி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில், எஸ்பிபி மறைவுக்கு இசையமைப்பாளர் இளையராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்.

எஸ்.பி.பியின் மறைவுக்கு வீடியோ மூலம் இசையமைப்பாளர் இளையராஜா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

சீக்கிரம் நீ எழுந்து வரவேண்டும் என கூறினேன், ஆனால் நீ வரவில்லை பாலு. உனது மறைவால் பேச வார்த்தையின்றி தவிக்கிறேன். எல்லா துக்கத்திற்கும் அளவிருக்கு ஆனால் இந்த துக்கத்திற்கு அளவில்லை என்றார்.

Next Story