விஜய்சேதுபதி குடும்பத்தை குறிவைத்து சமூக வலைதளங்களில் ஆபாச விமர்சனங்கள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

விஜய்சேதுபதி குடும்பத்தை குறிவைத்து சமூக வலைதளங்களில் ஆபாச விமர்சனங்கள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 20 Oct 2020 6:35 AM GMT (Updated: 2020-10-20T12:12:45+05:30)

விஜய்சேதுபதி குடும்பத்தை குறிவைத்து சமூக வலைதளங்களில் உலவும் ஆபாச விமர்சனங்களால் அவரது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கடுமையாக கொதிப்படைந்துள்ளனர்.

சென்னை, 

முதலமைச்சரின் தாயார் தவுசாயம்மாள் காலமானதையொட்டி,  முதலமைச்சர் பழனிசாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில்  நடிகர் விஜய்சேதுபதி நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 

அதைத்தொடர்ந்து 800 திரைப்படம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “நன்றி, வணக்கம்” என்றால் எல்லாம் முடிந்து விட்டதாக அர்த்தம், இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை என்று தெரிவித்திருந்தார். முன்னதாக 800 பட விவகாரத்தில் நடிகர் விஜய்சேதுபதி மீது கடும் கண்டனக் குரல்கள் எழுந்தன. பின்னர் முத்தையா முரளிதரனின் வேண்டுகோளை ஏற்று படத்திலிருந்து விலகுவதாக அவர் அறிவித்தார். 

இந்நிலையில் விஜய்சேதுபதி குடும்பத்தை குறிவைத்து சமூக வலைதளங்களில் ஆபாச விமர்சனங்கள் உலவுவதாகவும், அதை உலவவிட்டவர்களை உடனடியாக கைது செய்யுங்கள் என்றும் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு தர்மபுரி தி.மு.க. எம்.பி.செந்தில்குமார் வலியுறுத்தி உள்ளார்.  

விஜய்சேதுபதி குடும்பத்தை குறிவைத்து சமூக வலைதளங்களில் உலவும் ஆபாச விமர்சனங்களால் அவரது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கடுமையாக கொதிப்படைந்துள்ளனர்.

Next Story