9 கோடி பார்வைகளை கடந்த வாத்தி கம்மிங் பாடல்; நடிகர் விஜய் ரசிகர்கள் உற்சாகம்


9 கோடி பார்வைகளை கடந்த வாத்தி கம்மிங் பாடல்; நடிகர் விஜய் ரசிகர்கள் உற்சாகம்
x
தினத்தந்தி 23 Nov 2020 3:44 PM GMT (Updated: 2020-11-23T21:14:53+05:30)

விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடல் 9 கோடி பார்வைகளை கடந்துள்ளது.

சென்னை,

கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாஸ்டர்.  இப்படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளார். படத்தில் அவருக்கு வில்லனாக நடிகர் விஜய்சேதுபதி நடித்துள்ளார்.

விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.  இந்த படத்தில் சாந்தனு, கைதி பட புகழ் அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.  இசை அனிருத்.  இந்த படத்தில் இடம் பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தீபாவளி பண்டிகையன்று படத்தின் டீஸர் வெளியானது.  அத்துடன் #MasterTeaser என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் ட்ரெண்டானது.  இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

மாஸ்டர் படத்தின் பாடல்கள், அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, பலரையும் ஈர்த்து வருகிறது.  அதன்படி, தற்போது வரை 9 கோடி பார்வைகளை தாண்டி தொடர்ந்து ஹிட் அடித்து வருகிறது.  இதனால் விஜய் ரசிகர்கள் மற்றும் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.

Next Story