நடிகர் விக்ரமின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்


நடிகர் விக்ரமின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
x
தினத்தந்தி 30 Nov 2020 11:02 AM GMT (Updated: 2020-11-30T16:32:45+05:30)

சென்னையில் நடிகர் விக்ரமின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்

சென்னை

இன்று காலை சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம டெலிபோன் ஒன்று வந்து உள்ளது. அதில் நடிகர் விக்ரமின் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கப்போவதாக கூறி விட்டு போன் துண்டிக்கப்பட்டது. 

கட்டுப்பாட்டு அறை போலீசார் உடனடியாக உயர் அதிகாரிகளையும், திருவன்மியூர் போலீசாரையும் அச்சுறுத்தும் அழைப்பு குறித்து எச்சரித்தனர். இதை தொடர்ந்து  போலீசார் பெசன்ட் நகரில் அமைந்துள்ள நடிகர் விக்ரமின் வீட்டிற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.  வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் குழுவினர்(பி.டி.டி.எஸ்)  மற்றும்  மோப்ப நாய்  வரவழைக்கப்பட்டது. நடிகர் விக்ரம் வீட்டை சோதனை செய்த போலீசார்  அந்த அழைப்பு ஒரு வதந்தி என்று கூறினர்.

வீட்டைச் சுற்றி சந்தேகத்திற்கிடமான பொருள்கள் எதுவும் இல்லை என்பதை உறுதிசெய்த பிறகு, வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் குழுவினர் அதனை வதந்தி என உறுதிபடுத்தினர்.   கட்டுப்பாட்டு அறைக்கு போன்  விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணத்தில் இருந்து இந்த அழைப்பு வந்ததாக போலீசார் கண்டுபிடித்தனர். முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் நடிகர்கள் விஜய் மற்றும் சூரியா ஆகியோரின் வீடுகளுக்கு  இதேபோன்ற அச்சுறுத்தல்கள் வந்து உள்ளன என போலீசார் தெரிவித்தனர். 


Next Story