கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த நடிகை ரகுல் பிரீத் சிங்


கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த நடிகை ரகுல் பிரீத் சிங்
x
தினத்தந்தி 29 Dec 2020 8:19 AM GMT (Updated: 2020-12-29T13:49:15+05:30)

கொரோனா தொற்று வைரஸால் பாதிக்கப்பட்ட ரகுல் ப்ரீத் சிங், தற்போது அதிலிருந்து மீண்டுவிட்டதாக அறிவித்துள்ளார்.

சென்னை

தடையற தாக்க படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர்  ரகுல் ப்ரீத் சிங், தமிழில் சூர்யாவுடன் என்.ஜி.கே., கார்த்தி ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் படங்களில் நடித்து பிரபலமானவர் ரகுல் பிரீத் சிங். என்னமோ ஏதோ, யுவன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கும் இந்தியன் 2, ஆர். ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.

சமீபத்தில், கொரோனா தொற்று வைரஸால் பாதிக்கப்பட்ட ரகுல் ப்ரீத் சிங், தற்போது அதிலிருந்து மீண்டுவிட்டதாக அறிவித்துள்ளார். டுவிட்டரில் அவர் கூறியதாவது:- 

எனக்கு கொரோனா இல்லை என்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. நான் தற்போது நலமாக உள்ளேன். அனைவருடைய வாழ்த்துகள், அன்புக்கு நன்றி. 2021-ம் வருடத்தை நல்ல உடல்நலத்துடன் நேர்மறை எண்ணங்களுடன் தொடங்க ஆர்வமாக உள்ளேன். அனைவரும் பொறுப்புடன் செயல்படுவோம். முகக்கவசம் அணிந்து, எல்லாவிதமான முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருப்போம் என கூறி உள்ளார்.

Next Story