சினிமா செய்திகள்

ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை ஷில்பா ஷெட்டி ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு + "||" + Shilpa Shetty filed a defamation suit against media outlets; Hearing in the case scheduled for tomorrow

ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை ஷில்பா ஷெட்டி ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு

ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு  நடிகை ஷில்பா ஷெட்டி ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு
ரூ.25 கோடி கேட்டு நடிகை ஷில்பா ஷெட்டி பத்திரிகையாளர்கள் மீது அவதூறு வழக்குத் கொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு விசாரணை நாளை நடைபெற உள்ளது.
மும்பை

ஆபாச படங்கள் தயாரித்து செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்து பணம் சம்பாதித்த புகாரில் பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கைதாகி உள்ளார். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள். மேலும் சில செயலிகளிலும் ஆபாச படங்களை பதிவேற்றியதில் ராஜ்குந்த்ராவுக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகித்து அதுகுறித்தும் விசாரிக்கின்றனர்.

கோடிக்கணக்கில் பணத்தை அள்ளுவதற்காக கணவர் ராஜ்குந்த்ராவின் ஆபாச பட லீலைகள் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு தெரிந்து தான் நடந்ததா?, அவருக்கும் வழக்கில் தொடர்பு உள்ளதா? என்பதை கண்டறியும் முயற்சியாக போலீசார் சமீபத்தில் அவரிடம் விசாரணை நடத்தினர். 

தேவைப்பட்டால் மீண்டும் விசாரிக்க திட்டமிட்டு உள்ளனர். 

அதேநேரத்தில் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு தற்போதைய தருணத்தில் குற்றமற்றவர் என்ற நற்சான்று வழங்க முடியாது என்றும் போலீசார் தெரிவித்தனர். அதாவது ராஜ் குந்த்ராவின் பண பரிவர்த்தனைகள் மற்றும் வங்கி கணக்குகள் குறித்து ஆய்வு செய்ய மும்பை குற்றப்பிரிவு போலீசார் நிதி தணிக்கையாளர்களை நியமித்துள்ளனர்.

தனது கணவர் ராஜ் குந்த்ரா மீது குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் 'தவறான செய்தி வெளியிட்ட  29 ஊடகங்களின்  ஊழியர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது நடிகை ஷில்பா ஷெட்டி மும்பை ஐகோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு  நாளை விசாரணைக்கு வர உள்ளது.

சில ஊடக நிறுவனங்கள்  நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும், அனைத்து அவதூறான செய்திகளையும்  நீக்க வேண்டும் மற்றும் ரூ .25 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று அந்த மனுவில்  ஷில்பா கோரியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. 2020-ம் ஆண்டு ஆபாச பட வழக்கில் ராஜ் குந்த்ராவை கைது செய்ய இடைக்கால தடை: மும்பை ஐகோர்ட்டு உத்தரவு
2020-ம் ஆண்டு ஆபாச பட வழக்கில் தொழில் அதிபர் ராஜ் குந்த்ராவை கைது செய்ய ஐகோர்ட்டு இடை கால தடை விதித்துள்ளது.
2. கணவர் மீதான ஆபாச பட வழக்கு: கருத்து சொல்வதை தவிர்க்கிறேன் -ஷில்பா ஷெட்டி முதல் அறிக்கை
ஷில்பா ஷெட்டி தன்னைப் பற்றி அவதூறான செய்திகளை வெளியிட்டதாக ஊடகங்கள் மீதுமும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
3. ஆபாச பட விவகாரம்: ஆண்கள் தவறுகளுக்கு பெண்களைக் குறை சொல்வதா...? ஷகிலா பயோபிக் நடிகை கோபம்
இந்திப் பட இயக்குநரும் தயாரிப்பாளருமான ஹன்சல் மேத்தா, ஷில்பா ஷெட்டிக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
4. ராஜ்குந்த்ரா ஆபாச பட வழக்கு கைது பயம் : நடிகை ஷெர்லின் சோப்ரா முன் ஜாமீன் மனு தள்ளுபடி
ராஜ்குந்த்ரா ஆபாச பட வழக்கில் கைது செய்து விடுவார்களோ என்ற பயத்தில் ஷெர்லின் சோப்ரா முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.aந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
5. ராஜ்குந்த்ரா விசாரணைக்கு ஒத்துழைக்காததால் கைது செய்யப்பட்டார்; மும்பை ஐகோர்ட்டில் போலீசார் தகவல்
ஆபாச படம் எடுத்து வெளியிட்ட வழக்கில் ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா விசாரணைக்கு ஒத்துழைக்காததால் கைது செய்யப்பட்டதாக ஐகோர்ட்டில் போலீசார் தெரிவித்தனர்.