பிக் பாஸ் பட்டம் வென்ற பிரபல நடிகர் மாரடைப்பால் மரணம்


பிக் பாஸ் பட்டம் வென்ற பிரபல நடிகர் மாரடைப்பால் மரணம்
x
தினத்தந்தி 2 Sep 2021 6:59 AM GMT (Updated: 2021-09-02T12:29:23+05:30)

சித்தார்த் சுக்லா 2008-ல் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். பிறகு 2014-ல் பாலிவுட்டில் அறிமுகமானார்.மும்பை

பிக் பாஸ் பட்டம் வென்ற நடிகர் சித்தார்த் சுக்லா மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 40.

இந்தி பிக் பாஸ் 13-வது சீசன் நிகழ்ச்சியில் பிக்பாச் பட்டம் வென்றவர் நடிகர் சித்தார்த் சுக்லா. ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ள சித்தார்த் சுக்லா,2 சினிமா படங்களில் நடித்துள்ளார்.

அவருக்கு இன்று காலை காலையில் மாரடைப்பு ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் ஆனால் அவர் மரணமடைந்தார். சித்தார்த் சுக்லாவுக்கு தாயும், இரு சகோதரிகளும் உள்ளார்கள்.

2008-ல் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். பிறகு 2014-ல் பாலிவுட்டில் அறிமுகமானார்.

சித்தார்த் சுக்லாவின் மரணத்துக்கு பாலிவுட் பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

Next Story