அரசியல், விவேக், தி.மு.க. ஆட்சி குறித்து நடிகர் வடிவேலு மனந்திறந்த பேட்டி- வீடியோ


அரசியல், விவேக், தி.மு.க. ஆட்சி குறித்து  நடிகர் வடிவேலு மனந்திறந்த பேட்டி- வீடியோ
x
தினத்தந்தி 11 Sep 2021 4:58 AM GMT (Updated: 2021-09-11T10:28:33+05:30)

இயக்குனர் சங்கர் இயக்கத்திலோ, தயாரிப்பிலோ நடிக்க வாய்ப்பே இல்லை. அந்த பக்கமே செல்லமாட்டேன் என நடிகர் வடிவேலு கூறி உள்ளார்.

சென்னை, 

நகைச்சுவை நடிகர் வடிவேலு சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

“எனது வாழ்க்கையில் பெரிய சூறாவளி புயலே அடித்து விட்டது. சில பிரச்சினைகளால் கடந்த 4 வருடங்களாக நடிக்கவில்லை. ஆனாலும் கொரோனா காலத்தில் எனது காமெடி மக்களுக்கு மருந்தாக இருந்தது மகிழ்ச்சி. இப்போது எனது நகைச்சுவை பயணம் மீண்டும் தொடங்குகிறது. மக்களை இன்னும் சிரிக்க வைத்து சந்தோஷப்படுத்தி விட்டுதான் இந்த உயிர் பூமியை விட்டு போகும். தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி. அவரை பார்த்த பிறகு எல்லாம் நல்லபடியாக நடக்கிறது. என்னை மீண்டும் நடிக்க வைக்க முயற்சி எடுத்த தயாரிப்பாளர் சுபாஷ்கரனுக்கு நன்றி.

இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படத்தில் இருந்து விலகி விட்டதாகவும், தற்போது மீண்டும் பெரிய திரைக்கு வந்திருப்பதால் வெப் சீரிஸ்ஸில் நடிக்கும் எண்ணம் இல்லை.

இயக்குனர் சங்கர் இயக்கத்திலோ, தயாரிப்பிலோ நடிக்க வாய்ப்பே இல்லை. அந்த பக்கமே செல்லமாட்டேன்.

இனி சரித்திர படங்களில் நடிக்கும் எண்ணம் இல்லை. அரசியலுக்கு வருவது இப்போது இல்லை. வாய்ப்பு வந்தால் நடிகர் உதயநிதியுடன் இணைந்து நடிப்பேன்.

தி.மு.க ஆட்சி சிறப்பாக உள்ளது. மக்கள் சந்தோஷப்படுகிறார்கள்.  நிறைய திட்டங்களை நிறைவேற்றிக்கொண்டே வருகிறார்கள். மக்களுக்கு மட்டுமன்றி எனக்கும் இந்த ஆட்சி சந்தோஷத்தை கொடுத்து உள்ளது.

திரையுலகில் நண்பன் விவேக்கின் வெற்றிடத்தையும் நிரப்ப வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது.

இவ்வாறு வடிவேலு கூறினார்.Next Story