நடிகர் அஜித்தின் “வலிமை படம்” 2022 பொங்கலுக்கு தியேட்டர்களில் வெளியீடு


நடிகர் அஜித்தின் “வலிமை படம்” 2022 பொங்கலுக்கு தியேட்டர்களில் வெளியீடு
x
தினத்தந்தி 22 Sep 2021 7:00 AM GMT (Updated: 2021-09-22T13:06:40+05:30)

நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை படம் 2022 பொங்கலுக்கு தியேட்டர்களில் வெளியிடப்படும் என தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார்.

சென்னை,

வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் படம் வலிமை. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தை தயாரித்து வருகிறார். இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் வேற மாறி பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. வலிமை திரைப்படம் முதலில் தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், வலிமை படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வலிமை படம் அடுத்தாண்டு 2022 ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையன்று தியேட்டர்களில் வெளியாகும் என தயாரிப்பாளர் போனிகபூர் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 

இந்தப் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா கும்மகொண்டா வில்லனாக நடிக்கிறார். இவர் நடித்த தெலுங்கில் வெளியான ஆர்எக்ஸ் 100 திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

வலிமை திரைப்படம் வெளியாகும் தேதி வெளியானதால் நடிகர் அஜித்தின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  நடிகர் விஜயின் பீஸ்ட் படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் வலிமை பற்றிய அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது. 

Next Story