ரூ.200 கோடி பண மோசடி: நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசிடம் விசாரணை


ரூ.200 கோடி பண மோசடி: நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசிடம் விசாரணை
x
தினத்தந்தி 25 Sep 2021 8:23 AM GMT (Updated: 2021-09-25T14:31:40+05:30)

லீனா பாலின் வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத் துறையினர் 82.5 லட்ச ரூபாய் பணம், விலையுயர்ந்த கார்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

மும்பை

200 கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று இரண்டாம் முறையாக விசாரணை நடத்த உள்ளனர்.

பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர், இவரது மனைவி லீனா பால்  ஆகியோர் ரேன்பக்சி நிறுவனர்கள் சிவீந்தர் சிங், மால்வீந்தர் சிங் ஆகியோரை ஏமாற்றியும் மிரட்டியும் 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இதன் அடிப்படையில் கடந்த மாதம் 24 ந்தேதி சென்னைக் கிழக்கு கடற்கரையில் உள்ள லீனா பாலின் வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத் துறையினர் 82.5  லட்ச ரூபாய் பணம், விலையுயர்ந்த கார்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். 

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசிடம் சுகேஷ் சந்திரசேகர் மொபைல் போன் மூலம் தொடர்பில் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன் அடிப்படையில் பண மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசிடம்  அமலக்கத்துறை அதிகாரிகள்  இன்று மீண்டும் விசாரணை நடத்த உள்ளனர். ஏற்கனவே கடந்த மாதமும் விசாரணை நடத்தியது. அந்த விசாரணை சுமார்  5 மணி நேரம் நடைபெற்றது

Next Story