" ஜாக்கி சான் மன்னிப்பு கேட்டார் "மறைமுகமாக ஷாருக்கானை விமர்சித்த கங்கனா ரனாவத்


 ஜாக்கி சான் மன்னிப்பு  கேட்டார் மறைமுகமாக ஷாருக்கானை  விமர்சித்த கங்கனா ரனாவத்
x
தினத்தந்தி 11 Oct 2021 10:40 AM GMT (Updated: 2021-10-11T16:10:20+05:30)

மகனின் போதை பொருள் நடிகர் ஜாக்கி சான் மன்னிப்பு கேட்டார் என ஷாருக்கனை மறைமுகமாக சாடிய நடிகை கங்கனா ரனாவத்

மும்பை

மராட்டிய  மாநிலம் மும்பையில் இருந்து, கோவா செல்லும் சொகுசு கப்பலில் நடைபெற்ற விருந்தில் போதைப் பொருள் பயன்படுத்துவதாக, போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அங்கு கப்பலில் சாதாரண பயணிகளை போல சென்று கண்காணித்த போது, தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்தியது தெரியவந்தது.  இதனை தொடர்ந்து, 8 பேரை பிடித்து விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றனர். இதில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கானும் ஒருவர் ஆவார்.

ஷாருக்கானின் மகனுக்கு ஆதரவாக பாலிவுட் பிரபலங்களான திரைப்பட தயாரிப்பாளர் ஹன்சல் மேத்தா, நடிகர்கள் ஹிருத்திக் ரோஷன், பூஜா பட் மற்றும் சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கருத்து தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில், வழக்கமாக சமூக வலைதளங்களில் சர்ச்சைகளை கிளப்பும் நடிகை கங்கனா ரணாவத், இப்போது இந்த பிரச்சினையை வைத்தும் இன்ஸ்டாகிராமில் பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில், ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான், தனது மகன் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டபோது பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார். மகனின் செயலுக்கு நான் வெட்கப்படுகிறேன். இது எனது தோல்வி. இந்த விவகாரத்தில் அவரை பாதுக்காக்கும் செயலில் ஈடுபடமாட்டேன் என்று கூறியிருந்தார் என்பதை பதிவு செய்துள்ளார். #justsaying என்ற ஹேஷ்டேக்கில் இதை அவர் வெளியிட்டுள்ளார்.

இதன் மூலம் ஷாருக்கானை பெயர் குறிப்பிடாமல் நடிகை கங்கனா விமர்சித்துள்ளார். கங்கனாவின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story