பாலியல் வன்கொடுமை : நடிகை ஷில்பா ஷெட்டி -ராஜ் குந்த்ரா மீது நடிகை ஷெர்லின் சோப்ரா மீண்டும் புகார்


பாலியல் வன்கொடுமை : நடிகை ஷில்பா ஷெட்டி -ராஜ் குந்த்ரா மீது நடிகை ஷெர்லின் சோப்ரா மீண்டும் புகார்
x
தினத்தந்தி 16 Oct 2021 6:23 AM GMT (Updated: 2021-10-16T11:53:40+05:30)

ஷெர்லின் சோப்ரா ஏப்ரல் 20, 2021 அன்று ஜுஹு காவல் நிலையத்தில் ஆஜராகி ராஜ் குந்த்ராவுக்கு எதிரான தனது வழக்கை வாபஸ் பெற்று இருந்தார்.

மும்பை

ஆபாசப் படங்கள் தயாரித்து செல்போன் செயலியில் பதிவேற்றிய புகாரில், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ளார். ராஜ்குந்த்ராவின் ஆபாசப் படங்களில் நடித்த நடிகைகளையும், தொழில் ரீதியாக அவருடன் தொடர்பு வைத்திருந்த நடிகைகளையும் போலீசார் விசாரிக்க முடிவு செய்தனர்.

ராஜ்குந்த்ரா பற்றி இந்தி நடிகை ஷெர்லின் சோப்ரா பரபரப்பு புகார் கூறியிருந்தார். அவருடன் பணியாற்றியது தனக்கு மோசமான அனுபவம் என்று கூறிய அவர், ராஜ்குந்த்ரா மீது பாலியல் புகாரும் கூறியிருந்தார்.

 2019 ஆம் வருடம் ராஜ் குந்த்ராவின் மானேஜர் தொடர்புகொண்டு புராஜெக்ட் பற்றி பேச வேண்டும் என்றார் பேசினோம். அதன் பிறகு திடீரென்று ராஜ் குந்த்ரா என் வீட்டிற்கு வந்தார். நான் அவரைத் தடுத்தும் என்னை முத்தமிடத் தொடங்கினார். தொடர்ந்து முன்னேறியதால் பயத்தில் அவரைத் தள்ளிவிட்டு பாத்ரூமுக்கு சென்று பூட்டிக் கொண்டேன். அவர் கிளம்பும் வரை வெளியே வரவில்லை என்று கூறியிருந்தார்.

ஷெர்லின் சோப்ரா 2021 ஏப்ரல் மாதம் ராஜ்குந்த்ரா மீது பாலியல் வன்கொடுமை  புகார் அளித்து இருந்தார். இதை தொடர்ந்து ராஜ்குந்த்ரா மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய்ப்பட்டது.

ஏப்ரல் 19 அன்று, ராஜ் குந்த்ரா சோப்ரா வீட்டிற்கு வலுக்கட்டாயமாக நுழைந்து வழக்கை வாபஸ் பெறுமாறு மிரட்டியதாக கூறினார். இதை தொடர்ந்து ஷெர்லின் சோப்ரா ஏப்ரல் 20, 2021 அன்று ஜுஹு காவல் நிலையத்தில் ஆஜராகி ராஜ் குந்த்ராவுக்கு எதிரான தனது வழக்கை திரும்பப் பெற்றுக் கொண்டார்.

ராஜ்குந்த்ராவுடன் அவருக்குள்ள தொடர்பு குறித்து விசாரிக்க போலீசார் நடிகை ஷெர்லின் சோப்ராவுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இந்த வழக்கில் தன்னை கைது செய்துவிடுவார்களோ என்ற பயத்தில் அவர் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால், இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில்  ஷெர்லின் சோப்ரா அக்டோபர் 14 அன்று ஜுஹு  போலீஸ் நிலையத்தில்  ராஜ் குந்த்ரா மற்றும் ஷில்பா ஷெட்டி மீது புகார் அளித்து உள்ளார்.

பாலியல் வன்கொடுமை, மோசடி மற்றும் மிரட்டல் குறித்து போலீசாரிடம் ஷெர்லின் சோப்ரா புகார் மனு அளித்து உள்ளார்.Next Story