“என்னை நெஞ்சார வாழ்த்திய அனைவருக்கும் நன்றி” - நடிகர் ரஜினிகாந்த் டுவீட்


“என்னை நெஞ்சார வாழ்த்திய அனைவருக்கும் நன்றி” - நடிகர் ரஜினிகாந்த் டுவீட்
x
தினத்தந்தி 26 Oct 2021 3:12 PM GMT (Updated: 2021-10-26T20:42:15+05:30)

விருது பெற்றதற்காக தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும், நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் திரைத் துறையின் உயரிய விருதாக கருதப்படும் மத்திய அரசின் தாதா சாகேப் பால்கே விருதை பெற்றார். டெல்லியில் நடைபெற்ற 67வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிக்கு இவ்விருதினை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கி சிறப்பித்தார். 

தமிழ் சினிமாவில் இவ்விருதினை நடிகர் சிவாஜி கணேசனும், இயக்குனர் பாலச்சந்தர் மட்டுமே பெற்றுள்ளனர். அந்த வகையில் திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை தமிழ் சினிமாவில் பெரும் மூன்றாவது நபர் ரஜினிகாந்த் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், தாதா சாகேப் பால்கே விருதினை தன்னை உருவாக்கிய தனது குருநாதர் இயக்குனர் கே.பாலச்சந்தருக்கும் , தனது அண்ணன் சத்தியநாராயண ராவ் கெய்க்வாட், தன்னுடைய நண்பர் ராஜ் பகதூர், தனது திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், சக நடிகர்கள் ,விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், ஊடகத்தினர், ரசிகர்கள் மற்றும் தமிழ் மக்களுக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த், தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும், அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவின் மூலம் நன்றி தெரிவித்துள்ளார். அந்த பதிவில், “என்னை நெஞ்சார வாழ்த்திய அரசியல் தலைவர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், அனைத்துத் துறை நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும், மக்களுக்கும் என்னுடைய இதயப்பூர்வமான நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

Next Story