கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் உடல்நிலை கவலைக்கிடம்


கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் உடல்நிலை கவலைக்கிடம்
x
தினத்தந்தி 29 Oct 2021 7:48 AM GMT (Updated: 2021-10-29T14:25:17+05:30)

கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெங்களூரு,

கன்னட திரைப்பட முன்னணி நடிகரும்  கன்னட சூப்பர் ஸ்டாரான  புனித் ராஜ்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாரடைப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் புனித் ராஜ்குமார் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  தொடர்ந்து அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.  அவருக்கு தொடர்ந்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதற்கிடையே, அவரது உடல்நிலை குறித்து தவறான வதந்திகள் பரவியதால் அவரது ரசிகர்களிடையே கொந்தளிப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Next Story