முதல்-அமைச்சர் எளிய மக்களின் தேவை அறிந்து செயலில் இறங்கிய வேகம் பிரமிக்க வைக்கிறது - நடிகர் சூர்யா டுவீட்


முதல்-அமைச்சர் எளிய மக்களின் தேவை அறிந்து செயலில் இறங்கிய வேகம் பிரமிக்க வைக்கிறது - நடிகர் சூர்யா டுவீட்
x
தினத்தந்தி 4 Nov 2021 3:15 PM GMT (Updated: 2021-11-04T20:45:59+05:30)

நரிக்குறவர், இருளர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னை,

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் வசித்துவரும் நரிக்குறவர், இருளர் மக்கள் நீண்ட காலமாக வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டை, சாதிச்சான்று உள்ளிட்டவை வழங்க கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.

இந்நிலையில் வியாழக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்பகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியதோடு அவர்களுக்கு தீபாவளி திருநாளையொட்டி வேட்டி சேலைகள் வழங்கினார்.

இதுகுறித்து நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பதிவில்,

மாண்புமிகு தமிழக முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எளிய பழங்குடிமக்களின் இல்லம் தேடிச்சென்று வழங்கியிருப்பது வெறும் பட்டா அல்ல, புதிய  நம்பிக்கை. காலங்காலமாக தொடரும் எளிய மக்களின் இன்னல்களுக்கு, நிரந்தர தீர்வு கிடைக்கும் என்கிற  நம்பிக்கையை அளித்துள்ளது… மேலும் எளிய மக்களின் தேவை அறிந்து உடன் செயலில் இறங்கிய வேகம் எங்களை பிரமிக்க வைக்கிறது. இந்த தீபாவளி திருநாளை மறக்கமுடியாத நன்னாளாக மாற்றிய மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு உளமார்ந்த நன்றி.அன்புடன், சூர்யா
என பதிவிட்டுள்ளார். 

Next Story