பிரபல மலையாள நடிகை மருத்துவமனையில் அனுமதி


பிரபல மலையாள நடிகை மருத்துவமனையில் அனுமதி
x
தினத்தந்தி 9 Nov 2021 5:36 AM GMT (Updated: 2021-11-09T11:06:18+05:30)

பிரபல மலையாள நடிகை கே.பி.ஏ.சி லலிதா உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொச்சி

பிரபல மலையாள நடிகை  கே.பி.ஏ.சி  லலிதா (வயது 74 )தமிழில், பரமசிவன், சுயேச்சை எம்.எல்.ஏ, கிரீடம், அலைபாயுதே, சினேகிதியே,மாமனிதன்   உள்பட பல படங்களில் நடித்துள்ளார். 1978 இல் சினிமாவில் நடிக்க தொடங்கினார். அவர் இதுவரை 550 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் . 

லலிதா சிறந்த துணை நடிகைக்காக, 2 முறை தேசிய விருதுகளை பெற்றுள்ளார். நான்கு மாநில திரைப்பட விருதுகள்  பெற்றுள்ளார். பிரபல மலையாள டைரக்டர்  பரதனின் மனைவி ஆவார். லலிதா தற்போது கேரள சங்கீத நாடக அகாடமியின் தலைவராக இருக்கிறார்.

லலிதா, கல்லீரல் பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து, கொச்சியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நேற்று சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இதுகுறித்து  மலையாள நடிகர் சங்க செயலாளர் இடைவேளை பாபு கூறியதாவது:-

கடந்த சில நாட்களாக அவர் உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். இப்போது அவர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என கூறினார்.

Next Story