கவனபடுத்துவது மட்டுமே கலைப்படைப்பின் மூலம் சாத்தியம் - நடிகர் சூர்யா


கவனபடுத்துவது மட்டுமே கலைப்படைப்பின் மூலம் சாத்தியம் - நடிகர் சூர்யா
x
தினத்தந்தி 15 Nov 2021 10:15 AM GMT (Updated: 2021-11-15T15:45:12+05:30)

கவனபடுத்துவது மட்டுமே கலைப்படைப்பின் மூலம் சாத்தியம் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

சென்னை,

சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய் பீம்’ திரைப்படத்தை பாராட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், ஜெய்பீம் திரைப்படத்தை பாராட்டிய திருமாவளவனுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக, சூர்யா எழுதியுள்ள கடிதத்தில், தொல்.திருமாவளவனின் வாழ்த்தும் பாராட்டும் மன நிறைவை அளித்தன. 

மக்கள் தொகையில் மிக சிறுபான்மையினராக இருக்கும் பழங்குடிகள் நலம் சார்ந்து தாங்களும் தங்கள் இயக்கமும் தொடர்ந்து செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. தங்கள் குறிப்பிட்டதை போல, தமிழக முதல்வ பழங்குடியின மக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வு காண உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது அனைவருக்கும் மிகுந்த மனநிறைவு தந்துள்ளது. 

பாதிக்கப்படும் மக்களின் பிரச்சினைகளை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பது மட்டுமே ஜெய் பீம் திரைப்படத்தின் நோக்கம். கவன படுவது மட்டுமே கலைப்படைப்பின் மூலம் சாத்தியம். உண்மையான சமூக மாற்றங்களை அரசும், அரசியல் இயக்கங்களும் மட்டுமே உருவாக்க முடியும். ஊக்கமூட்டும் தங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story