சினிமா செய்திகள்

ஜெய் பீம் விவகாரம்: உங்கள் அன்பு என்னை திக்குமுக்காடச் செய்துள்ளது- நடிகர் சூர்யா + "||" + Dear all, this love for #Jaibhim is overwhelming

ஜெய் பீம் விவகாரம்: உங்கள் அன்பு என்னை திக்குமுக்காடச் செய்துள்ளது- நடிகர் சூர்யா

ஜெய் பீம் விவகாரம்: உங்கள் அன்பு என்னை திக்குமுக்காடச் செய்துள்ளது- நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் ஞானவேல் இயக்கிய ஜெய்பீம் திரைப்படம் ஒடிடியில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
சென்னை,

த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெய் பீம்'. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகியுள்ளது. இப்படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. படத்தை சூர்யா தயாரித்து, நடித்துள்ளார்.

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்தனர். ஆனால், இந்தப் படத்திற்கு பாமக தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. சமூக வலைத்தளங்களிலும் சூர்யாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பதிவுகள் வெளியிடப்பட்டன. அதேவேளையில், சூர்யாவுக்கு ஆதரவாகவும் பலர் குரல் கொடுத்து வருகின்றனர். 

இந்த நிலையில், நடிகர் சூர்யா தனது டுவிட்டரில் வெளியிட்ட டுவிட் பதிவில் கூறியிருப்பதாவது;  “ஜெய் பீம் திரைப்பட விவகாரத்தில் எனக்கு துணை நின்ற அனைவருக்கும் நன்றி உங்கள் அன்பு என்னை திக்குமுக்காடச் செய்துள்ளது” எனப்பதிவிட்டுள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. சமூகத்தின் மீது சூர்யா காட்டும் கருணை பாராட்டுக்குரியது - டைரக்டர் ஷங்கர்
ஜெய்பீம் திரைப்படத்திற்காக நடிகர் சூர்யா மற்றும் டைரக்டர் த.செ. ஞானவேலுக்கு டைரக்டர் ஷங்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
2. ஜெய்பீம் பட விவகாரம்: நடிகர் சூர்யா, ஜோதிகா மீது வழக்கு
ஜெய்பீம் பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா, ஜோதிகா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
3. ஜெய் பீம் சர்ச்சை: பா.ம.க-வை விமர்சிக்கும் தி.மு.க.வின் முரசொலி
திமுக-வின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் ஜெய் பீம் சர்ச்சை குறித்து பா.ம.க.வை விமர்சித்துள்ளது.
4. ராஜாகண்ணுவின் மனைவி பேரில் ரூ.10 லட்சம் டெபாசிட்: பாலகிருஷ்ணனுக்கு சூர்யா பதில்
ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி அம்மாள் பேரில் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்ய முடிவு செய்திருப்பதாக பாலகிருஷ்ணனுக்கு பதில் அறிக்கையில் நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
5. ஐஎம்டிபி ரேட்டிங்கில் முதல் இடம் பிடித்த 'ஜெய்பீம்' திரைப்படம்
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள 'ஜெய்பீம்' திரைப்படம் ஐஎம்டிபி ரேட்டிங்கில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.