பண மோசடி செய்ததாக நடிகை சினேகா போலீசில் திடீர் புகார்


பண மோசடி செய்ததாக நடிகை சினேகா போலீசில் திடீர் புகார்
x
தினத்தந்தி 18 Nov 2021 6:27 AM GMT (Updated: 2021-11-18T13:23:44+05:30)

தனியார் ஏற்றுமதி நிறுவனம் பண மோசடி செய்ததாக கானாத்தூர் காவல் நிலையத்தில் நடிகை சினேகா புகார் அளித்துள்ளார்.

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை சினேகா கமல்ஹாசன், விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை சினேகா தனியார் ஏற்றுமதி நிறுவனம் மீது சென்னை கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

அந்த புகாரில் இரண்டு தொழிலதிபர்கள் ரூபாய் 26 லட்சம் மோசடி செய்ததாகவும் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி கிடைக்கும் என்று கூறியதாகவும் அதை நம்பி முதலீடு செய்ததாகவும் தற்போது வட்டி கேட்டதற்கு தன்னை மிரட்டுவதாகவும் புகார் அளித்துள்ளார்.

இந்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு தொழிலதிபர் மீது நடிகை சினேகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள தகவல் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story