தி மேட்ரிக்ஸ்: ரிசர்ரக்‌ஷன்ஸ்: பிரியங்கா சோப்ராவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு


தி மேட்ரிக்ஸ்: ரிசர்ரக்‌ஷன்ஸ்: பிரியங்கா சோப்ராவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
x
தினத்தந்தி 23 Nov 2021 8:12 AM GMT (Updated: 2021-11-23T13:42:52+05:30)

'தி மேட்ரிக்ஸ்: ரிசர்ரக்‌ஷன்ஸ்’ படத்தில் பிரியங்கா சோப்ராவின் கதாபாத்திர அறிமுகத்துக்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி

1999ஆம் ஆண்டு வக்காவ்ஸ்கி சகோதரிகள் இயக்கத்தில் வெளியான படம் ‘தி மேட்ரிக்ஸ்'. கேயானு ரீவ்ஸ் நடித்த இந்தப் படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

முதல் பாகத்தை தொடர்ந்து 2003ஆம் ஆண்டு 'தி மேட்ரிக்ஸ் ரீலோடட்' என்ற 2ம் பாகமும், அதே ஆண்டின் இறுதியில் 'தி மேட்ரிக்ஸ் ரெவல்யூஷன்ஸ்' என்ற படமும் வெளியாகி வெற்றியைக் குவித்தன. இப்படங்களை வார்னர் பிரதர்ஸ் நிறுவனமும், வில்லேஜ் ரோட் ஷோ நிறுவனமும் இணைந்து தயாரித்தன.

ஏறக்குறைய 17 ஆண்டுகளுக்குப் பிறகு 'தி மேட்ரிக்ஸ்' படத்தின் அடுத்த பாகம் உருவாகியுள்ளது. இப்படத்துக்கு 'தி மேட்ரிக்ஸ்: ரிசர்ரக்‌ஷன்ஸ்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இதில் கேயானு ரீவ்ஸ், கேரி ஆன் மோஸ் உள்ளிட்டோர் மீண்டும் நடித்துள்ளனர். இப்படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவும் நடித்துள்ளார். அவரது கதாபாத்திரம் குறித்துப் படக்குழு எந்தவொரு தகவலையும் வெளியிடாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று பிரியங்கா சோப்ராவின் கதாபாத்திர அறிமுகத்துக்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.Next Story