போட்டோவுக்கு போஸ் கொடுத்த தந்தை ; தலையில் அடித்து கொண்ட ஆர்யன் கான் நண்பர்


போட்டோவுக்கு போஸ் கொடுத்த தந்தை ; தலையில் அடித்து கொண்ட ஆர்யன் கான் நண்பர்
x
தினத்தந்தி 27 Nov 2021 8:56 AM GMT (Updated: 2021-11-27T15:36:56+05:30)

போதைப்பொருள் வழக்கில் ஜாமீனில் இருக்கும் அர்பாஸ் மெர்ச்சன்ட் போட்டோவுக்கு போஸ் கொடுக்காமல் வேகமாகச் சென்று காரில் ஏறிக்கொண்டார்.

மும்பை, 

போதைப்பொருள் வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ஷாருக்கான் மகனுக்கு 14 நிபந்தனைகளை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஜாமீன் நடைமுறைகள் முடியாததால் அவர் சிறையில் இருந்து வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. 

மும்பை - கோவா சொகுசு கப்பலில் கடந்த மாதம் 2-ந் தேதி போதை பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் போது கப்பலில் போதை விருந்து நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கில் பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து போதை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதில் ஆர்யன் கான் மும்பை ஆர்தர் ரோடு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.  ஜாமீன் கேட்டு ஆர்யன் கான், அவரது நண்பர் அர்பாஸ் மெர்சன்ட், மாடல் அழகி முன்முன் தமேச்சா ஆகிய  3 பேருக்கும்  மும்பை ஐகோர்ட்டு  ஜாமீன் வழங்கி  உள்ளது.

ஜாமீன் நிபந்தனை ஏற்று இவர்கள் போதைப்பொருள் தடுப்பு  அலுவலகத்திற்கு சென்று  கையெழுத்திட்டு வருகின்றனர்.

நேற்று அர்பாஸ் மெர்ச்சன்ட், மும்பை போதைப்பொருள் கட்டுப்பாட்டு  அலுவலகத்திற்கு  கையெழுத்திட வந்தார்.  கையெழுத்திட்டு விட்டு வெளியே வந்த போது  போட்டோ கிராபர்கள் போட்டோ எடுத்தனர். ஆனால்  அர்பாஸ் மெர்ச்சன்ட் அதனை தவித்து விட்டு சென்றார்.  ஆனால் அவரது தந்தை  அஸ்லம் மெர்ச்சன்ட் மகனை இழுத்து அருகில் நிறுத்திக்கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். அதை பார்த்து அர்பாஸ் மெர்ச்சன்ட்  தனது தலையில் அடித்து கொண்டார்.

தந்தையை பார்த்து  உடனே நிறுத்துங்கப்பா என்று எரிச்சலுடன்  தலையில் அடித்து கொண்ட அர்பாஸ்  போட்டோவுக்கு போஸ் கொடுக்காமல்  வேகமாகச் சென்று காரில் ஏறிக்கொண்டார்.

ஆர்யன் கான் தனியாகத்தான் வந்திருந்தார். அவர் வெளியில் பத்திரிக்கையாளர்கள் நிற்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் வெளியில் வரும் போது பத்திரிக்கையாளர்களைக் கண்டுகொள்ளாமல் நேராகத் தனது காரில் ஏறி புறப்பட்டுச்சென்றார். 

Next Story