நடிகர் அஜித்குமார் பைக்கில் இருந்து விழுந்து எழும் காட்சி - வெளியானது வலிமை மேக்கிங் வீடியோ


நடிகர் அஜித்குமார் பைக்கில் இருந்து விழுந்து எழும் காட்சி - வெளியானது வலிமை மேக்கிங் வீடியோ
x
தினத்தந்தி 14 Dec 2021 6:00 PM IST (Updated: 14 Dec 2021 6:26 PM IST)
t-max-icont-min-icon

வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சென்னை, 

போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் வலிமை. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பின்னணி இசை உள்ளிட்ட வேலைகளில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. வலிமை படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.  வெளியீட்டுக்கு ஒரு மாதமே எஞ்சி உள்ளதால், படத்தின் அப்டேட்டுக்களும் அடுத்தடுத்து வெளியான வண்ணம் உள்ளன. ஏற்கனவே இப்படடத்தின் டீசர், பாடல்கள் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது மாஸாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த ,மேக்கிங் வீடியோவில் அஜித் நடித்த ஸ்டண்ட் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அதில் அஜித் பைக் ஸ்ட்ண்ட் காட்சி ஒன்றில் நிலை தடுமாறி கீழே விழுகின்ற காட்சி இடம் பெற்றுள்ளது. அப்போது மகாத்மா காந்தியின் வரிகள் அந்த இடத்தில் இடம்பெற்றிருப்பது அனைவரையும் கவர்ந்துள்ளது. 

அந்த வரிகள்:- (“நாம் தடுமாறி விழலாம்... ஆனால்  மீண்டும் எழுவோம்... நாம் போர்களத்தில் இருந்து பின்வாங்கக்கூடாது...  அதுவே போதும்”) என்று  மகாத்மா காந்தியின் வரிகள் ஆங்கிலத்தில் அதில் இடம்பெற்றுள்ளது. 

தற்போது “வலிமை” மேக்கிங் வீடியோவை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். “வலிமை” மேக்கிங் வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.

Next Story