"15 வயது வித்தியாச காதல்" காதலரை பிரிந்த பிரபல நடிகை: ரசிகர்கள் அதிர்ச்சி
சுஷ்மிதா சென்னும், நடிகர் ரொஹ்மான் ஷாலும் கடந்த 2018ம் ஆண்டில் இருந்து காதலித்து வந்தனர்.
புதுடெல்லி,
மிஸ் யுனிவர்ஸ் அழகிப் பட்டம் வென்ற முதல் இந்திய பெண்ணான சுஷ்மிதா சென் இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். மூத்த மகள் ரினி தன் அம்மா சுஷ்மிதா வழியில் நடிகையாக விரும்புகிறார்.
இளைய மகள் அலிஷா பள்ளிக்கு சென்று கொண்டிருக்கிறார்.
சுஷ்மிதா சென்னும், நடிகர் ரொஹ்மான் ஷாலும் கடந்த 2018ம் ஆண்டில் இருந்து காதலித்து வந்தனர். ரொஹ்மான், சுஷ்மிதாவை விட 15 வயது இளையவர்.
ரொஹ்மானுக்கும் சுஷ்மிதாவுக்கும் இடையே 15 வயது வித்தியாசம் உள்ளது. சுஷ்மிதாவுக்கு 46 வயது, ரொஹ்மானுக்கு 30 வயது. இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் முறையில் வாழ்ந்து வந்தனர்.
கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டாக காதலித்து வந்த இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக ஊடகங்களில் அடிக்கடி செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போது இருவரும் தங்கள் உறவை முறித்துக் கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரொஹ்மானை தன்னுடைய வீட்டில் இருந்து சுஷ்மிதா சென் வெளியேற்றிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதனை உறுதிப்படுத்தும் விதமாக சுஷ்மிதா சென் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘நாங்கள் நண்பர்களாக அறிமுகமானோம். நண்பர்களாக இருந்தோம்! எங்களது உறவு மிகவும் ஆழமானது. காதல் முறிந்து ரொம்ப நாளாச்சு... அன்பு அப்படியே இருக்கிறது.
இனி யூகிக்க வேண்டாம். வாழ்க... வாழ விடுங்கள், பொன்னான நினைவுகள். நன்றி உன்னை நேசிக்கிறேன்!’ என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், சுஷ்மிதா சென் தனது பதிவில் #nomorespeculations #liveandletlive #cherishedmemories #gratitude #love #friendship போன்ற ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தியுள்ளார். இவர்களின் உறவு முறிந்தாலும், இருவருக்குள்ளும் காதல் குறையவில்லை என்று பாலிவுட்டில் பேசப்படுகிறது.
சுஷ்மிதாவின் போஸ்ட்டை பார்த்த ரொஹ்மானோ, எப்பொழுதுமே என்று கமெண்ட் அடித்து உள்ளார்.
Related Tags :
Next Story