நடிகை காஜல் அகர்வால் கர்ப்பம்..!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 1 Jan 2022 8:12 PM GMT (Updated: 2022-01-02T02:07:59+05:30)

நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதை அவரது கணவர் கௌதம் கிட்ச்லு, சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளார்.

மும்பை,

தென்னிந்திய சினிமாவின் முன்னனி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் கடந்த அக்டோபர் 30, 2020 அன்று  தொழிலதிபரான கௌதம் கிட்ச்லு என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில், காஜல் அகர்வால் தற்போது கர்ப்பமடைந்துள்ளார். இந்த தகவலை அவரது கணவர் கௌதம் கிட்ச்லு, சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

தற்போது காஜல் அகர்வால், கிட்ச்லு தம்பதிக்கு சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.


Next Story