சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது..!


சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது..!
x
தினத்தந்தி 10 Feb 2022 3:40 PM IST (Updated: 10 Feb 2022 3:40 PM IST)
t-max-icont-min-icon

சிவகார்த்திகேயன் அடுத்தாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது

சென்னை 

நடிகர் சிவவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம்  'டாக்டர்'. தற்போது சிவகார்த்திகேயன்  நடித்துள்ள டான் , அயலான்  திரைப்படங்களில் நடித்து முடித்து உள்ளார் .

இப்படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்தாக  நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது . இந்த படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர் அனுதீப் இயக்குகிறார்  .ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து சுரேஷ் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தற்காலிகமாக 'எஸ்.கே 20' என பெயரிடப்பட்டுள்ளது.

 தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் உருவாகிறது.


Next Story