"உலகநாடுகள் எதிர்பார்க்கும் வலிமை" போஸ்டர் ஒட்டி ரசிகர்கள் கொண்டாட்டம்..!


உலகநாடுகள் எதிர்பார்க்கும் வலிமை போஸ்டர் ஒட்டி ரசிகர்கள் கொண்டாட்டம்..!
x
தினத்தந்தி 23 Feb 2022 2:36 PM IST (Updated: 23 Feb 2022 2:36 PM IST)
t-max-icont-min-icon

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அஜித் நடித்துள்ள 'வலிமை' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சென்னை,

நடிகர்  அஜித்குமார் நடிப்பில் இயக்குனர் எச். வினோத் இயக்கியுள்ள திரைப்படம் 'வலிமை'.  இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் போனி கபூர் இணைந்து தயாரித்துள்ளனர்.

'வலிமை' திரைப்படத்திற்கு சென்சாரில் தணிக்கைக்குழு 'யு /ஏ 'சான்றிதழ் வழங்கியுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 'வலிமை' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

இந்த நிலையில் உலக நாடுகளின் தலைவர்களுடன் வேட்டி சட்டையில் அஜித் நடந்து வரும் புகைப்படத்தோடு, "உலகநாடுகள் எதிர்பார்க்கும் வலிமை" என ரசிகர்கள் மதுரையில்  போஸ்டர் ஒட்டி  உள்ளனர்.

Next Story