ரூ.100 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்துவரும் 'வலிமை'


ரூ.100 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்துவரும் வலிமை
x
தினத்தந்தி 28 Feb 2022 10:53 PM IST (Updated: 28 Feb 2022 10:53 PM IST)
t-max-icont-min-icon

அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் ரூ.100 கோடி வசூலை தாண்டி வசூல் சாதனை படைத்து வருகிறது.

சென்னை,

அஜித் நடிப்பில் ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் கழித்து வெளியான திரைப்படம் 'வலிமை'  ஆகும். இந்த திரைப்படத்திற்கு அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்த படம் கடந்த 24-ஆம் தேதி வெளியானது.

செயின் பறிப்பு, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடும் பைக் ரேசிங் குழுவை, அஜித் போலீஸ் அதிகாரியாக  தேடிக் கண்டுபிடிப்பதை படத்தின் ஒரு வரி கதையாக எடுத்துக்கொண்டு, ஹெச் வினோத் படத்தை முழுக்க முழுக்க பைக் ரேசிங் காட்சிகளின் பின்னணியில் உருவாகியுள்ளார். 

படம் வெளியாகி நான்கு நாட்களை கடந்த நிலையில், தற்போது படமானது தமிழகத்தில்   ரூ.100 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்துள்ளது. திரைப்படத்தில் அம்மா சென்டிமென்ட், ஆக்ஷன் காட்சிக்கு இடையிடையே, சென்டிமென்ட் காட்சிகள் மற்றும்  படத்தின் மையக் கருவும், சமுதாயத்திற்கு போதைப்பொருளுக்கு எதிராக பேசியுள்ளதால், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பல திரையரங்குகளில் முழு இருக்கையுடன் ரசிகர்கள் படம் பார்த்து வருவதால், வலிமை படமானது இன்னும் வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Next Story