அரசியலுக்கு வரும் எண்ணமில்லை - நடிகர் அஜித்குமார்
அரசியலுக்கு வரும் எண்ணமில்லை என நடிகர் அஜித்குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சமீபத்தில் வெளியான வலிமை படம் திரையரங்குகளில் வெளியாகி வசூலை அள்ளிக்கொண்டு இருக்கிறது. இப்படத்தை பற்றி நாள்தோறும் பலரும் பெருமையாக பேசி வருகின்றனர். இந்த படம் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளன்று வெளியாகி இருக்கிறது.
நடிகர் அஜித் அரசியலுக்கு வருவதற்கு தயராகிறார் என்றே நினைக்கின்றேன் என்று மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் சங்கரலிங்கம் தெரிவித்து இருந்ததாக பிரபல தனியார் தொலைகாட்சி செய்தி வெளியிட்டு இருந்தது. அதற்கும் மறுப்பு தெரிவிக்கும் வகையில்,
நடிகர் அஜித்குமாருக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை. எனவே இதுபோன்ற தவறான தகவல்களை ஊக்குவிப்பதைத் தவிர்க்குமாறு மதிப்பிற்குரிய ஊடகவியலாளர்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என நடிகர் அஜித்குமார் தரப்பில் அவரது மேலாளர் டுவீட் செய்துள்ளார்.
"Mr Ajith kumar has got no intentions of venturing into politics and hence humbly requests the respected members of the media to refrain from encouraging such misleading informations".https://t.co/vILUFO8HCI
— Suresh Chandra (@SureshChandraa) March 1, 2022
Related Tags :
Next Story