“புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு” - இயக்குனர் சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி
குறைந்த பட்ஜெட்டில் மிகச் சிறந்த திரைப்படங்களை உருவாக்குவதற்கு பல இயக்குனர்கள் தயாராக உள்ளதாக ஆர்.கே.செல்வமணி கூறினார்.
சென்னை,
சென்னை வடபழனியில் உள்ள தனியார் திரையரங்கில் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்க நிர்வாகிகளின் பதவியேற்பு விழா நடைபெற்றது. அப்போது இயக்குனர் சங்கத்தின் தலைவராக ஆர்.கே.செல்வமணி, செயலாளராக ஆர்.பி.உதயகுமார், பொருளாளராக பேரரசு ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர்.
அதனை தொடர்ந்து துணைத் தலைவர், இணைச் செயலாளர் உள்ளிட்ட 19 புதிய நிர்வாகிகள் பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி, குறைந்த பட்ஜெட்டில் மிகச் சிறந்த திரைப்படங்களை உருவாக்குவதற்கு பல இயக்குனர்கள் தயாராக உள்ளதாகவும், அவர்களுக்கு வாய்ப்பளிப்பதன் மூலம் வருடத்திற்கு 10 புதிய இயக்குனர்களை அறிமுகப்படுத்துவதே தங்களின் நோக்கம் என்றும் தெரிவித்தார்.
Related Tags :
Next Story