பிரியங்கா சோப்ராவுக்கு என்ன ஆச்சு...? புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி


பிரியங்கா சோப்ராவுக்கு என்ன ஆச்சு...? புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி
x

பிரியங்கா சோப்ரா புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

மும்பை

இந்தியாவைச் சேர்ந்த பிரியங்கா சோப்ரா கடந்த 2000ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்று அனைவரின் கவனத்தையும் பெற்றார். 

பின்னர் தமிழில் நடிகர் விஜய் உடன் தமிழன் என்ற திரைப்படத்தில் நடித்த பிரியங்கா பின்னர் பாலிவுட் படங்களில் நடித்து புகழ்பெற்றார். டைம் ஊடகத்தின் உலகின் சக்தி வாய்ந்த 100 நபர்கள்  மற்றும் போர்ப்ஸ் பத்திரிக்கையின் உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலிலும் பிரியங்கா சோப்ரா இடம் பிடித்து உள்ளார். 

 பிரியங்கா சோப்ரா பாப் பாடகர் நிக் ஜோனசை மணந்து அமெரிக்காவில் குடியேறி இருக்கிறார்.நடிகை பிரியங்கா சோப்ரா-நிக் ஜோன்ஸ் தம்பதியினர் வாடகைத் தாய் மூலம் குழந்தை ஒன்றை பெற்றடுத்து உள்ளனர்.

சமீபத்தில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரியங்கா சோப்ரா சமீபத்தில் 'ஷாப்பிங்' செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த புகைப்படத்தை  பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

எடுப்பான உடல்வாகு கொண்ட பிரியங்கா சோப்ரா, தற்போது உடல் எடை கூடி குண்டாக மாறி காட்சி அளிக்கிறார்.

இதனால் 'என்ன ஆச்சு பிரியங்காவுக்கு?', என்று அவரது ரசிகர்கள் வேதனையில் இருக்கிறார்கள்.  'வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றாலும் பிரியங்காவும் அம்மாதானே... எனவேதான் இந்த மாற்றம்', என்று அவருக்கு ஆதரவான கருத்துக்களையும் ரசிகர்கள் பதிவிடுகிறார்கள்.

Next Story