இந்தியாவில் வசூல் சாதனை படைக்கும் "தி காஷ்மீர் ஃபைல்ஸ்" திரைப்படம்


இந்தியாவில் வசூல் சாதனை படைக்கும் தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம்
x
தினத்தந்தி 17 March 2022 8:57 AM IST (Updated: 17 March 2022 9:51 AM IST)
t-max-icont-min-icon

"தி காஷ்மீர் ஃபைல்ஸ்" திரைப்படம் விரைவில் இந்தியாவில் ரூ.100 கோடி வசூல் சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை,

விவேக் ரஞ்சன் அக்னி ஹோத்ரி இயக்கத்தில் பல்லவி ஜோஷி மற்றும் அனுபம் கெர் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடிப்பில் உருவான திரைப்படம் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்'. 

80-களின் பிற்பகுதியிலும் 90-களின் முற்பகுதியிலும் காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீரிலிருந்து காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட பின்னணியை கதைக்களமாக கொண்டு தயாராகியிருந்த இந்த திரைப்படம் கடந்த 11-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. தற்போது இந்த படம் நாடு முழுவதும் பல தரப்பினரிடமிருந்தும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

மேலும் இந்த திரைப்படத்திற்கு அரியானா, மத்திய பிரதேசம், திரிபுரா, கோவா, கர்நாடகா, உத்தரகாண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வரிச்சலுகை வழங்கியுள்ளது.

பிரதமர் மோடி , மத்திய மந்திரி அமித்ஷா உள்ளிட்ட பலவேறு பாஜக தலைவர்கள் இந்த திரைப்படத்தை வெகுவாக பாராட்டி உள்ளனர்.

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் வெளியாகிய 6 தினங்களில் இந்தியாவில் மட்டும்  ரூ.80 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளுக்கு பிறகு இந்த திரைப்படம் நேற்று மட்டும் ரூ.19.30 கோடி வசூலித்துள்ளது.

இன்று அல்லது நாளை இந்த திரைப்படம் ரூ.100 கோடி வசூல் சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. மேலும் உலகளவில் இந்த திரைப்படம் ரூ.70 கோடிக்கு மேல் வசூலாகியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Next Story