ஏலம் விடப்பட்ட ஏ.ஆர். ரஹ்மானின் ஆடை - எவ்வளவு விலைக்கு போனது தெரியுமா?


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 23 March 2022 1:38 PM IST (Updated: 23 March 2022 1:38 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் நடந்த விழா ஒன்றில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ஆடை லட்சக்கணக்கில் ஏலம் போனது

சென்னை,

இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் மற்றும் பாடகராக இருப்பவர் இசைப்புயல் என்று அழைக்கப்படும் ஏ.ஆர்.ரஹ்மான். சர்வதேச அளவில் சினிமாத் துறைக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஆஸ்கார் விருதை இரண்டு முறை வென்ற ஒரே இந்தியர் ஏ.ஆர்.ரஹ்மான்.

இந்நிலையில் இன்று ஆழ்வார்பேட்டை மியூசிக் அகாடமியில் ராஜஸ்தான் காஸ்மோ கிளப் அறக்கட்டளையின் 28-ம் ஆண்டு நிறுவன தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக கைத்தறி அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டார்.  

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, ஆடைகளை வாங்க இயலாதவர்களுக்கு நிதி கொடுத்து உதவும் திட்டத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் பயன்படுத்திய ஆடை ஒன்று 6 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. இதை, பிரமோத் சுரடியா என்பவர் ஏலம் மூலம் வாங்கினார்.

Next Story