பாதியில் நிறுத்தப்பட்ட ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் : முள்வேலியை தகர்த்து தியேட்டரை சூறையாடிய ரசிகர்கள்


Image Courtesy : ANI
x
Image Courtesy : ANI
தினத்தந்தி 25 March 2022 4:12 PM IST (Updated: 25 March 2022 4:12 PM IST)
t-max-icont-min-icon

ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் இன்று வெளியானது .

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’ (ஆர்.ஆர்.ஆர்). பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் இன்று வெளியானது .

இந்த நிலையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள  
 தியேட்டரில்  ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது .

இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள்  வாக்குவாதம் செய்து, தியேட்டரில் இருந்த கண்ணாடிகளை  நொறுக்கி சேதப்படுத்தினர் மேலும் திரைமுன் அமைக்கப்பட்டிருந்த முள்வேலியையும் தகர்த்தனர் . இந்த தகவல் அறிந்து வந்த போலீசார் ரசிகர்களை அப்புறப்படுத்தினர் 

Next Story