தனுஷின் 'நானே வருவேன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
நானே வருவேன் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியிருக்கிறது
சென்னை,
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் 'நானே வருவேன்'. இந்த திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். புவனா சுந்தர் படத்தொகுப்பு செய்கிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ் செல்வராகவன் இயக்கத்தில் நடிப்பதால் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது
இந்நிலையில் நானே வருவேன் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியிருக்கிறது .இயக்குனர் செல்வராகவன் அந்த போஸ்டரை வெளியிட்டிருக்கிறார் .
🤓🤓🤓 #NaaneVaruvenpic.twitter.com/XXqgRLJG5k
— selvaraghavan (@selvaraghavan) March 25, 2022
Related Tags :
Next Story