5 மொழிகளில் வெளியாக இருக்கும் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம்


5 மொழிகளில் வெளியாக இருக்கும் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம்
x
தினத்தந்தி 26 March 2022 1:51 PM IST (Updated: 26 March 2022 1:51 PM IST)
t-max-icont-min-icon

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ளதாக சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.

சென்னை 
 
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தில் இருந்து முதல் பாடலான 'அரபிக்குத்து' பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று,யூடியூப்பில் சாதனையும் படைத்தது .

அதனை தொடர்ந்து அனிருத் இசையில் நடிகர் விஜய் பாடியிருக்கும் 'ஜாலியோ ஜிம்கானா' பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது. படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறாது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் படம் எப்போது வெளியாகும் என விஜய் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து இருந்தனர்.

இந்த நிலையில் பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ம் தேதி திரையரங்கில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்தது. இதனை தொடர்ந்து தற்போது  இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.


Next Story