அடி செய்த உதவி...! ஆஸ்கர் விழாவில் ஸ்மித்திடம் அறை வாங்கிய தொகுப்பாளர் கிறிஸ் ராக்கிற்கு ஒரு இனிப்பான செய்தி!


அடி செய்த உதவி...! ஆஸ்கர் விழாவில் ஸ்மித்திடம் அறை வாங்கிய தொகுப்பாளர் கிறிஸ் ராக்கிற்கு ஒரு இனிப்பான செய்தி!
x
தினத்தந்தி 29 March 2022 10:38 AM IST (Updated: 29 March 2022 11:35 AM IST)
t-max-icont-min-icon

கடந்த ஒரு மாதமாக விற்கப்பட்ட டிக்கெட்டுகளை விட ஒரே இரவில் அதிக டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளன

வாஷிங்டன்,

ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில், ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திடமிருந்து கன்னத்தில் பளாரென அறை வாங்கிய ஆஸ்கர் விழா நிகழ்ச்சி தொகுப்பாளரும் நகைச்சுவை நடிகருமான கிறிஸ் ராக்கிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது.

அவர் அடி வாங்கிய சம்பவத்தை தொடர்ந்து, அவர் நடத்தும் மேடை நகைச்சுவை நிகழ்ச்சிக்கான டிக்கெட் முன்பதிவு சட்டென அதிகரித்துள்ளது வியப்படைய வைத்துள்ளது. 

அந்த நிகழ்ச்சிக்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை $46 அமெரிக்க டாலராக இருந்த நிலையில், இந்த சம்பவத்துக்கு பின் அது $341 டாலராக அதிகரித்துள்ளது. அவர் வில்பர் தியேட்டரில் இந்த மேடை நகைச்சுவை நிகழ்ச்சியை நடத்த உள்ளார்.
இதுகுறித்து பதிவிட்டுள்ள அந்த டிக்கெட் நிர்வாகம், கடந்த ஒரு மாதமாக விற்கப்பட்ட டிக்கெட்டுகளை விட ஒரே இரவில் அதிக டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளன என்று தெரிவித்துள்ளது.

Next Story