"கடும் உழைப்பின் மூலம் முதல் -அமைச்சர் ஆனார் ஸ்டாலின்" - நடிகை கோவை சரளா


கடும் உழைப்பின் மூலம் முதல் -அமைச்சர் ஆனார் ஸ்டாலின் - நடிகை கோவை சரளா
x
தினத்தந்தி 29 March 2022 1:13 PM IST (Updated: 29 March 2022 1:13 PM IST)
t-max-icont-min-icon

எந்த அரசும் செய்யாத அளவுக்கு இன்று பெண்களுக்கு சரிசமமான அளவில் பல நல்ல பொறுப்புகளை நமது முதல்-அமைச்சர் வழங்கியுள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கும் வகையில் ‘மனிதநேய திருநாள்’ என்ற தொடர் நிகழ்ச்சிகள் சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.  அதன்படி, நேற்று மாலை, 65வது நிகழ்ச்சியாக ‘‘மாதரை காக்கவே சுழல்நிதி; மாண்புகள் காப்பவர் தளபதி’’ என்ற தலைப்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கும் விழா சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள தனியார் பள்ளி திடலில் நடைபெற்றது.  இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகை கோவை சரளா பேசுகையில், 

‘எந்த அரசும் செய்யாத அளவுக்கு இன்று பெண்களுக்கு சரிசமமான அளவில் பல நல்ல பொறுப்புகளை நமது முதல்-அமைச்சர் மட்டுமே வழங்கியுள்ளார். முன்னாள் முதல்-அமைச்சரின் மகனாக இருந்தாலும் சாதாரணமாக அல்லாமல், கடும் உழைப்பின் மூலமே முதல்-அமைச்சர் ஆகியுள்ளார். பேச்சில் நிதானம், செயல்பாட்டில் தெளிவு, நடையில் மிடுக்கு என நாம் அனைவரும் பெருமைப்படும் வகையில் முதல்-அமைச்சர்  செயல்பட்டு வருகிறார்,’’ என்றார்.

இதையடுத்து, 100 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் சுழல் நிதியினை அமைச்சர் சேகர்பாபு மற்றும் நடிகை கோவை சரளா ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில் கொளத்தூர் பகுதி செயலாளர் நாகராஜன், இளைஞர் அணி மகேஷ் குமார் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Next Story