சமூக வலைதளங்களில் வைரலாகும் நடிகர் அஜித்குமாரின் சமீபத்திய கிளிக்ஸ்...!
அஜித் ஒரு பிரபலமான கோவிலுக்கு சென்றுள்ளார், அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.
சென்னை,
அஜித்தின் அடுத்தடுத்த படங்களை ரசிகர்கள் ஸ்டைலாக ஏகே 61, 62 என்று தான் அழைக்கிறார்கள்.
வலிமை படத்தை தொடர்ந்து அஜித் இயக்குனர் வினோத்துடன் மீண்டும் கைகோர்க்கிறார், அந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.
அதற்கு அடுத்தபடியாக, அஜித்தின் 62-வது படத்திற்காக, இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் கூட்டணி அமைக்கிறார் அஜித். அப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
நடிகர் அஜித்தை பற்றிய செய்திகள் எப்போதுமே இணையத்தில் வைரலாகிவிடும்.
அந்த வகையில், சமீபத்தில் தான், அஜித் தனது குடும்பத்துடன் வெளியே சென்று உணவு அருந்திய புகைப்படங்கள் வந்தன. பின் தனது மனைவியுடன் அவர் எடுத்த போட்டோவும் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில், இப்போது , அஜித் ஒரு பிரபலமான கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.
அதனை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.அநேகமாக, அது கேரளாவில் உள்ள ஒரு கோவிலாக இருக்கும் என்று சில ரசிகர்கள் கூறி உள்ளனர்.
Ajith sir was spotted in the temple.
— Ajith (@ajithFC) March 31, 2022
| #HVinoth | #Valimai | #Ajith#AK#AjithKumar | #AK61 | #AK62 | pic.twitter.com/C9u7Il71As
Related Tags :
Next Story