சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை பீட் செய்த ஆர்ஆர்ஆர்..!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படத்தின் வசூல் சாதனையை ஆர்ஆர்ஆர் படம் முறியடித்து உள்ளது.
சென்னை
கடந்த 10 நாட்களில் ஆர்ஆர்ஆர் படம் 819 கோடி ரூபாயை உலகளவில் வசூல் செய்துள்ளது. இதையடுத்து இந்திய அளவில் அதிக வசூலை ஈட்டியுள்ள 6-வது படம் என்ற பெருமையும் படத்திற்கு கிடைத்துள்ளது. தங்கல், பாகுபலி 2, பஜ்ரங் பாய்ஜான், சிக்ரெட் சூப்பர்ஸ்டார் மற்றும் பீகே ஆகிய படங்கள் முதல் 5 இடங்களில் உள்ளது.
இந்நிலையில் தற்போது 10 நாட்களில் 6-வது இடத்திற்கு வந்துள்ள ஆர்ஆர்ஆர் தொடர்ந்து சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. அதனால் 6-வது இடத்தில் இருந்து மேலும் முன்னேற வாய்ப்புள்ளது. இந்நிலையில் சூப்பர்ஸ்டாரின் 2.O படத்தின் மொத்த வசூலான 800 கோடி ரூபாயை தற்போது ஆர்ஆர்ஆர் 10 நாட்களில் முறியடித்துள்ளது.
ஆர்ஆர்ஆர் படம் 450 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டது போலவே ரஜினியின் 2.O படமும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாக 450 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. டைரக்டர் ஷங்கரின் பிரம்மாண்டமான படைப்பாக வெளியானது இந்தப் படம்.
Related Tags :
Next Story