விஜய் நடிக்கும் “தளபதி 66“ திரைப்படத்தின் கதாநாயகியாகும் ராஷ்மிகா மந்தனா


விஜய் நடிக்கும் “தளபதி 66“ திரைப்படத்தின் கதாநாயகியாகும் ராஷ்மிகா மந்தனா
x
தினத்தந்தி 5 April 2022 5:59 PM IST (Updated: 5 April 2022 5:59 PM IST)
t-max-icont-min-icon

ராஷ்மிகாவின் பிறந்தநாளான இன்று படக்குழு இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஐதராபாத்,

நடிகர் விஜய் நடித்து முடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் 14 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. 

இதையடுத்து விஜய் தனது 66-வது படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். இந்த படத்தை பிரபல தெலுங்கு டைரக்டர் வம்சி இயக்குகிறார். இவர் தமிழ், தெலுங்கில் வெளியான தோழா மற்றும் தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த மஹரிஷி, ராம்சரண் நடித்த எவடு உள்ளிட்ட படங்களை டைரக்டு செய்துள்ளார். 

இந்த படத்தின் கதாநாயகி யார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், விஜயுடன் ராஷ்மிகா மந்தனா இணைய உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ராஷ்மிகாவின் பிறந்தநாளான இன்று படக்குழு இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் விஜயுடன் நடிக்க வேண்டும் என்ற ராஷ்மிகா மந்தனாவின் கனவு நனவாகி உள்ளது. 


Next Story