சம்பள பாக்கி தொடர்பாக 3 ஆண்டுகளாக வழக்கு தொடராதது ஏன்? - சிவகார்த்திகேயனுக்கு ஐகோர்ட்டு கேள்வி


கோப்புப் படம்
x
கோப்புப் படம்
தினத்தந்தி 7 April 2022 1:00 PM IST (Updated: 7 April 2022 1:00 PM IST)
t-max-icont-min-icon

சம்பள பாக்கி தொடர்பாக 3 ஆண்டுகளாக வழக்கு தொடராதது ஏன்? என்று சென்னை ஐகோர்ட்டு சிவகார்த்திகேயனிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை,

கே.இ. ஞானவேல் ராஜா தனது ஸ்டுடியோ கிரீன் சார்பாக தயாரித்த மிஸ்டர் லோக்கல் படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்திருந்தார். எம். ராஜேஷ் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

மிஸ்டர் லோக்கல் படத்தில் நடிக்க தனக்கு ரூ.15 கோடி சம்பளம் என நிர்ணயித்து ஒப்பந்தம் போடப்பட்டதாகவும், ஆனால் ஞானவேல் ராஜா தனக்கு ரூ.11 கோடி மட்டுமே சம்பளம் தந்ததாகவும் ரூ 4 கோடி சம்பள பாக்கியை தரக்கோரி தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மீது நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

மேலும் தனக்கு அளித்த ரூ.11 கோடி சம்பளத்துக்கு வருமான வரி பிடித்தம் செய்து அளித்ததாகவும் ஆனால் அதனை வரிமானவரித்துறையிடம் ஞானவேல் ராஜா செலுத்தவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அவர் தனக்கு மீதமுள்ள சம்பள பாக்கியை அளிக்கும்வரை ஞானவேல் ராஜா விக்ரம் மற்றும் சிம்பு படங்களில் முதலீடு செய்ய தடைவிதிக்குமாறும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதில் மனு தாக்கல் செய்த தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, மிஸ்டர் லோக்கல் படத்தால் தனக்கு ரூ. 20 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும் அந்த படத்தின் கதையே தனக்கு பிடிக்கவில்லை என்றும் சிவகார்த்திகேயனின் கட்டாயத்தின் பேரிலேயே அந்த படத்தை தயாரித்ததாகவும் கூறினார்.

இந்த நிலையில் சம்பள பாக்கி விவகாரம் தொடர்பாக 3 ஆண்டுகளாக வழக்கு தொடராதது ஏன்? என நடிகர் சிவகார்த்திகேயனிடம் சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் டிடிஎஸ் தொகை தொடர்பான மனு நிலுவையில் உள்ள நிலையில், மற்றொரு மனு தாக்கல் செய்தது ஏன்? எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

Next Story