'பீஸ்ட்' படத்திற்கு கேரளாவில் மவுசு: தியேட்டர் முன் குத்தாட்டம் போட்ட இளம்பெண்கள்...!


பீஸ்ட் படத்திற்கு கேரளாவில் மவுசு: தியேட்டர் முன் குத்தாட்டம் போட்ட இளம்பெண்கள்...!
x
தினத்தந்தி 13 April 2022 10:24 PM IST (Updated: 13 April 2022 10:24 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' திரைப்படம் இன்று காலை திரையரங்குகளில் வெளியானது.

திருவனந்தபுரம்,

நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'பீஸ்ட்'. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி என பெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. 

அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அனைவராலும் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இப்படம் இன்று காலை திரையரங்குகளில் வெளியானது. காலை முதலே திரையரங்குகளில் குவிந்த ரசிகர்கள் கட்அவுட் வைத்து மாலை அணிவித்து பாலபிஷேகம் செய்து மேளம் அடித்து கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்திற்கு கேரளாவில் மவுசு அதிகரித்துள்ளது. கேரளாவில் ஏராளமான தியேட்டர்களில் பீஸ்ட் படம் வெளியான நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தியேட்டரில் இளம்பெண்கள், தாய்மார்கள் என பெண்கள் கூட்டம் அலைமோதியது. அனைவரும் பீஸ்ட் படத்தை மிகுந்த ஆர்வத்துடன் கண்டு களித்து சென்றனர்.

இதில் குறிப்பாக ரசிகைகள் சிலர் தியேட்டர் முன்பு குத்தாட்டம் போட்டு பீஸ்ட் படத்தை கொண்டாடினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Next Story